இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி அணித் தலைவர் ரஹீமின் இரட்டைச் சதத்தின் உதவியுடன் 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகியது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்தவகையில் முதலில் துப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் கைகொடுக்க 4 விக்கெட்டுகளை இழந்து 570 ஓட்டங்களைப்பெற்றிருந்தபோது தனது முதலாவது இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக டில்சான் 54, குமார் சங்கக்கார 155, ஆட்டமிழக்காது திரிமான்ன 155 மற்றும் சந்திமல் 116 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக சொஹஹ் ஹஸி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 638 ஓட்டங்களைப்பெற்று 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீமின் வரலாற்று இரட்டைச் சதம் மற்றும் அஷ்ரபுல் 190, நஸீர் ஹ{சைன் 100 ஆகியோரின் உதவியுடன் வலுவான நிலையை அடைந்தது.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர, ஏரங்க, ஹேரத், மென்டிஸ் மற்றும் டில்ஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதேவேளை, 68 ஓட்டங்களால் பின்னிலை வகிக்க தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி சற்றுமுன் வரை ஒரு விக்கெட்டை இழந்து 64 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இந்நிலையில் பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 638 ஓட்டங்களைப்பெற்று 68 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக