துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் விஜய் குமார் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு நேற்று வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
இதில், லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற இந்தியாவின் விஜய் குமார் 25 மீற்றர் "ரேபிட் பயர் பிஸ்டல்" பிரிவில் 2321 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.
தவிர, ஆசிய அளவில் முதலிடத்திலும் (2197 புள்ளிகள்) நீடிக்கிறார். உலக தரவரிசையின் முதலிடத்தில் சீனாவின் பெங்க் டிங் உள்ளார்.
இதே போல, 10 மீற்றர் "ஏர் ரைபிள்" பிரிவில் லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ககன் நரங் (1407 புள்ளிகள்) நான்காவது இடத்திலும் சக வீரர் அபினவ் பிந்த்ரா 17வது இடத்திலும் உள்ளார்.
"டபிள் டிராப்" பிரிவில், இந்தியாவின் ரஞ்சன் சோதி தொடர்ந்து 7வது இடம் வகிக்கிறார். மற்ற இந்திய வீரர்களான குர்பிரித் சிங் 11வது இடத்திலும், பெம்பா தமங் 23வது இடத்திலும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக