12 மார்., 2013


மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிரான எப்.ஏ.,கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியைசெல்சி அணி "டிரா'செய்தது.

இங்கிலாந்தில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும்எப்.ஏ.,கோப்பை கால்பந்து தொடர்
நடக்கிறது. மான்செஸ்டர் நகரில் நடந்த காலிறுதியில் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் மோதின.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ஹெர்ணான்டஸ் (4வது நிமிடம்)ரூனே (10வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். இதற்கு செல்சி அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட செல்சி அணிக்கு ஹஜார்டு (58வது நிமிடம்)ராமிரஸ் (67வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். தொடர்ந்து போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் "டிராஆனது.
இதனையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்க மீண்டும் காலிறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. லண்டனில் நடக்கவுள்ள இப்போட்டியில் வெற்றி பெறும் அணிஅரையிறுதிக்கு முன்னேறும்.

கருத்துகள் இல்லை: