10 மார்., 2013

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்: வங்காளதேச வீரர் அஸ்ரப், ரகீம் சதம்

இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 570 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. திரிமன்னே (155 ரன்), சங்கக்காரா (142), சண்டிமால் (116) ஆகியோர் சதம் அடித்தனர்.
 
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்காள தேசம் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தது.
 
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. வங்காள தேசம் தொடர்ந்து ஆடியது. முகமது அஸ்ரப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இது அவருக்கு 6-வது சதம் ஆகும். அவரைத்தொடர்ந்து ரகீம் சதம் அடித்தார். வங்காளதேசம் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

கருத்துகள் இல்லை: