7 மார்., 2013

6-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் 9 அணிகளும் தங்களது இறுதி அணியை அறிவித்துள்ளன. 2 முறை
சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 பேர் கொண்ட அணியை அறிவித்து உள்ளது. 

உள்ளூர் போட்டியில் விளையாடும் 7 புதுமுக வீரர்கள் தமிழகத்தை சேர்ந்த பி.அபராஜித், விஜய் சங்கர், கார்த்திகேயன் ஆகியோர் இதில் அடங்குவார்கள். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இம்தியாஸ் அகமது, அங்கிட் ராஜ்பூட், அரியானாவை சேர்ந்த மோகித் சர்மா, கர்நாடகாவை சேர்ந்த ரோனிட் மோர் ஆகியோரும் அணியில் இடம் பெற்ற புதுமுக வீரர்கள் ஆவார்கள். 

இந்த 7 பேரும் முதல் தர போட்டியில் விளையாடியவர்கள். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் கிறிஸ் மாரிஸ் (தென்ஆப்பிரிக்கா), நானஸ் பென் லாங்லின் (ஆஸ்திரேலியா) ஜேகன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) அசிலா தனன் ஜெயா (இலங்கை) ஆகிய 5 வீரர்களை எடுத்தது. 

6-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ அணி விவரம்:- 

பேட்ஸ்மேன்கள்: டோனி (கேப்டன்), ரெய்னா, முரளிவிஜய், பெலிசிஸ், மைக்ஹஸ்சி, பத்ரிநாத், அணிருதா ஸ்ரீகாந்த், விர்த்தி மான் சகா, பி.அபராஜித். பந்துவீச்சாளர்கள்: அஸ்வின், ஹில்பெனாஸ், நானஸ், குலசேகரா, லாங்லின், ஜகாட்டி, ஜேகன் ஹோல்டர், இம்தியாஸ் அகமது, ரோனித் மோர், ராஜ்பூத், கார்த்திகேயன், மொகித் சர்மா. ஆல்ரவுண்டர்கள்: அல்பி மார்கல், வெய்ன் பிராவோ, ரவிந்திர ஜடேஜா, கிறிஸ் மாரிஸ், அகிலாதனன் ஜெயா, விஜய் சங்கர்.

கருத்துகள் இல்லை: